விழுப்புரம்: நிகழ் பருவத் தேர்வில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக்கட்டணம் உயத்தப்படாது என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்குவதற்கு முன்பு, தனியார்பல்கலைக்கழகமாக இருந்தபோது உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்டு நியிமிக்கப்பட்டுள்ளனர். இவைகள் சுட்டிக்காட்டப்பட்டதன் அடிப்படையில் 56 உதவிப் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யவதற்கான கட்டாயம் ஏற்பட்டதன் அடிப்படையில், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவின் நடவடிக்கையின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எதிர்காலங்களில் தகுதிகேற்ப வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.
இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டணம்ரூ.150-லிருந்து ரூ. 225-ஆக உயத்தியுள்ளார்கள். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். தேர்வுக்கட்டணம் தொடர்பாக அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்கள், தேர்வுக்கட்டுபாட்டாளர்களுடன் கலந்துப்பேசி ஒரே மாதிரியான தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க முடிவு எடுக்கப்படும். எனவே நிகழ் பருவத் தேர்வில் தேர்வு கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பழைய தேர்வுக்கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும்.
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள வினாத்தாள் குளறுபடிகள் குறித்து உயர்கல்வித்துறை செயலர் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இதில் யார் மீது தவறும் இருந்தாலும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று க.பொன்முடி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.