தமிழ்நாடு

ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது: மு.க. ஸ்டாலின்!

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ. 18) காலை 10 மணியளவில் தொடங்கியது. முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்னைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநர் கடமை. மசோதாக்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு தெளிவடையலாம். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.

ஜனநாயகத்தை அவமதிக்கிறார் ஆளுநர் ஆர்ன்.என். ரவி. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருந்து ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் அரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் ஆளுநர். தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முட்டுக்கட்டையிடுகிறார் ஆளுநர். வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவசர அவசரமாக மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார் என முதல்வர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT