தமிழ்நாடு

7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு 

DIN

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (நவ.20) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT