முகப்பு
தமிழ்நாடு

கனமழை: சென்னையில் 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலைமுதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உள்பட 22 விமானங்கள் புறப்படுவதில் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் தொடர் கனமழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதால் சில விமானங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.