தமிழ்நாடு

செய்தியாளர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர்

திருநெல்வேலி, கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

திருநெல்வேலி, கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த முத்துக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு பொதுக்கூட்டம்

ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

மண்டபம் அருகே வேன், பைக் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

கடத்தப்பட்ட குழந்தை 20 நிமிஷங்களில் மீட்பு

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் இருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்து இயக்க கோரிக்கை

SCROLL FOR NEXT