தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

DIN

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  

அந்தவகையில், தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்குத் நீர்வரத்து அதிகரிப்பதால் அவ்வப்போது அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக இன்று(சனிக்கிழமை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

பொதுத் தோ்வு: மாநிலத் தரவரிசையில் பின்தங்கும் நாமக்கல் மாவட்டம்

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

பொறியாளா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

SCROLL FOR NEXT