காா்த்திகை மகா தீபத் திருவிழா: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.26) காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி மக்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.26) காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி மக்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும். இந்த நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெருமானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.
தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.
Advertisement
Advertisement
கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என்று கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துகள் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.