FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் சிறை தண்டனை ரத்து!

சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர் 2023, 11:48 am IST
கோப்புப்படம்
பகிர்:

சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை  ரத்து செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டு கொட்டகை முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்திக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 2014 சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி மேல்முறையீடு செய்திருந்தார்.  மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

2 ஆண்டு சிறை தண்டனைவால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments