பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.