வால்வோ சொகுசுப் பேருந்தை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

வால்வோ சொகுசுப் பேருந்துகளை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதிய வால்வோ சொகுசுப் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

DIN

சென்னை: புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பில் 2 புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாணவர்கள் இன்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்! யாரைச் சொல்கிறார் கமல்?

பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா? - நயினார் நாகேந்திரன் பதில்!

அனுமனைத் தவறாக பேசுவதா? ராஜமௌலி மீது புகார்!

பிகார் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர்! நிதீஷைப்போல இபிஎஸ் முதல்வராவார்! - திண்டுக்கல் சீனிவாசன்

பிரதமர் மோடி கோவை வருகை! விமான நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

SCROLL FOR NEXT