சென்னை: கடந்த 2 மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ஓரே மாதத்தில் ரூ.203 வரை உயா்த்தப்பட்டுள்ளதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில், வா்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத ஜிஎஸ்டி - பணமதிப்பு நீக்கம் - கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது.
இந்த விலையேற்றத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என அவப் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.