தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

DIN

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிகார் மாநில அரசு தரவுகளுடன் அறிக்கை வெளியிட்டதும் நாடு முழுவதும் அதுகுறித்த பேச்சு அதிகமாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் முனியசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

'தமிழ்நாட்டில் 3,000-க்கும் மேற்பட்டசாதிகள் இருப்பதாலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் இருப்பதாலும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தமிழ்நாடு அரசிடம் இதுகுறித்து மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை' என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(புதன்கிழமை) தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 'சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது, எனவே நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட முடியாது. இதற்கு தமிழ்நாடு அரசைதான் அணுக வேண்டும்' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT