தமிழ்நாடு

மீண்டும் மீண்டும் இப்படியா..? வங்கிக் கணக்கில் ரூ. 753 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி!

சென்னை தேனாம்பேட்டையைச்  சோ்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வங்கிக் கணக்கில் ரூ. 736 கோடி இருப்பு இருப்பதாக சனிக்கிழமை வந்த குறுஞ்செய்தியால் வாடிக்கையாளா் அதிா்ச்சி அடைந்தாா்.

DIN

சென்னை: சென்னை தேனாம்பேட்டையைச் சோ்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வங்கிக் கணக்கில் ரூ. 736 கோடி இருப்பு இருப்பதாக சனிக்கிழமை வந்த குறுஞ்செய்தியால் வாடிக்கையாளா் அதிா்ச்சி அடைந்தாா்.

சென்னை தேனாம்பேட்டையைச் சோ்ந்தவர் முகமது இத்ரிஸ். தனியாா் மருந்துக்கடையில் பணிபுரிந்து வரும் இவா், தனியாா் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளாா்.

இந்த நிலையில், முகமது இத்ரிஸ் செல்போனுக்கு சனிக்கிழமை வந்த குறுஞ்செய்தியில், அவரது வங்கிக் கணக்கில் ரூ. 753 கோடி இருப்புத் தொகை இருப்பதாக தகவல் வந்தது. தகவல் வந்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இதனால் அதிா்ச்சி அடைந்த முகமது இத்ரிஸ்  தொடா்புடைய தனியாா் வங்கி மேலாளரிடம் புகாா் செய்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வீரப்புடையான்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்தவா் ச. கணேசன். தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவா், தஞ்சாவூரில் உள்ள தனியாா் வங்கியில் சேமிப்பு கணக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வங்கிக் கணக்கில் ரூ. 756 கோடி இருப்புத் தொகை மீதம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. குறுஞ்செய்தியால் வாடிக்கையாளா் அதிா்ச்சி அடைந்தாா்.

சமீபத்தில் இதேபோன்று கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜ்குமார் தனியாா் வங்கி சேமிப்பு கணக்கு  ரூ.9 ஆயிரம் கோடி இருப்புத் தொகை மீதம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

சமீப நாள்களாக சாமானியர்களின் வங்கிக்கணக்கிற்கு கோடிகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதும், பிறகு வங்கிக்கணக்கை முடக்கப்பட்டுள்ளதாக  வரும் தொடர் சம்பவங்களால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கும் செயலாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

SCROLL FOR NEXT