கோப்புப் படம் 
தமிழ்நாடு

மகாளய அமாவாசை: மேல்மலையனூருக்கு 380 சிறப்புப் பேருந்துகள்!

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

DIN

விழுப்புரம்: மகாளய அமாவாசையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கோட்டத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புரட்டாசி மாத அமாவாசையன்று (மகாளய அமாவாசை) விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் பல்வேறு நகரங்களிலிருந்து அக்டோபர் 14-ஆம் தேதி 380 சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளது.

சென்னையிலிருந்து 210 பேருந்துகள், தாம்பரத்திலிருந்து 40, காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரிலிருந்து 15, விழுப்புரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிலிருந்து 20, திருவண்ணாமலையிலிருந்து 20, திருக்கோவிலூரிலிருந்து 10, கள்ளக்குறிச்சியிலிருந்து 5, ஆரணி/ஆற்காடு/திருப்பத்தூரிலிருந்து 10 என மொத்தமாக 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT