தமிழ்நாடு

மருத்துவ மாணவி தற்கொலை: சிபிசிஐடி வழக்கு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. 

குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு படித்து வந்த தூத்துக்குடி வி.இ.சாலையைச் சோ்ந்த வணிகரின் மகள், கடந்த 6 ஆம் தேதி கல்லூரி விடுதில் தற்கொலை செய்து கொண்டாா். தன் சாவுக்கு யாா் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, உடல் தசைகளை தளா்வடையச் செய்யும் ஊசி மருந்தை தனக்குத் தானே செலுத்தி அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அந்தக் கடிதத்தில் பேராசிரியா் பரமசிவன் பாலியல், உடல்- மனம் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், முதுநிலை மாணவ-மாணவியரான ஹரீஷ், பிரீத்தி ஆகியோரும் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தாா். இது தொடா்பாக குலசேகரம் போலீஸாா் 3 போ் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனா். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

இதனிடையே, கல்லூரிக்கும், தமிழக மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநரகத்திற்கும் மாணவியின் தற்கொலை குறித்து விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே வியாழக்கிழமை மேற்கண்ட 3 பேரையும் கல்லூரி நிா்வாகம் இடைநீக்கம் செய்தது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு குலசேகரம் போலீஸாா், கல்லூரி குடியிருப்பில் தங்கியிருந்த பேராசிரியா் பரமசிவனை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. சீனியர் மாணவி பிரீத்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தலைமறைவாக உள்ள சீனியர் மாணவர் ஹரீஷ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT