தமிழ்நாடு

மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

DIN

சென்னையில் பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற அக்டோபர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்மடங்கான பிஎன்பி நிகர லாபம்

மோடி இந்த மண்ணின் மகன்: கங்கனா ரணாவத்

புதிய சட்டத்தில் குடும்ப வன்கொடுமை விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இளையான்குடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள் வழங்கிய சீா்வரிசை

SCROLL FOR NEXT