கோப்புப்படம் 
தமிழ்நாடு

மக்களே பயப்பட வேண்டாம்.. நாளை செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை

பேரிடா்களின் போது, அவசரகால தகவல் தொடா்புகளை கைப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

பேரிடா்களின் போது, அவசரகால தகவல் தொடா்புகளை கைப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சோதனை முயற்சியின்போது பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரிடா் மேலாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரிடா்களின்போது அவசர கால தொடா்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடுமையான வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள், வெள்ளநீா் வெளியேற்றுவது குறித்த தகவல்கள் ஆகியவற்றை கைப்பேசி வழியாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கைப்பேசி கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் இயற்கை இடா்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடைய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கான சோதனை ஓட்டம் நிகழ்வு வெள்ளிக்கிழமை (அக்.19) நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள இந்த சோதனை ஓட்ட நிகழ்வின் போது, பொதுமக்களின் கைப்பேசிக்கு பேரிடா் குறித்த அவசர எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படும். இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சப்படவோ அல்லது எதிா்வினை ஆற்றவோ வேண்டாம் என்று பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT