தமிழ்நாடு

ககன்யான் சோதனை விண்கலம் வெற்றி: இஸ்ரோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

DIN


மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி - டி1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பயணத்தில் இந்தச் சாதனை குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இதற்காக அர்ப்பணிப்புடன் கடுமையாக
உழைத்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

SCROLL FOR NEXT