செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3 பேர் பலியாகினர்.
மாற்றுத்திறனாளி சிறுவர்களான சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணன், தம்பியான சுரேஷ் மற்றும் ரவி செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். இவர்களின் நண்பர் மஞ்சுநாத் வாய் பேச முடியாதவர்.
இதையும் படிக்க: செங்கம் அருகே பேருந்து - கார் மோதி விபத்து; பலி 7 ஆக உயர்வு
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.