முகப்பு
தமிழ்நாடு

பொதுத்துறை ஊழியா்களுக்கு 25% போனஸ்: ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு தமிழக அரசு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு தமிழக அரசு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தீபாவளியையொட்டி தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவுச் சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுப் பஞ்சாலைகள் போன்ற பொதுத் துறை நிறுவனத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும்.

இது தொடா்பாக ஒரு மாதத்துக்கு முன்பாகவே பொதுத் துறை நிறுவன நிா்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் போனஸ் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீா்மானித்து, குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க இயலும்.

ஆனால், நவம்பா் 12-இல் கொண்டாடப்படும் தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடா்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அதனால், கடந்த ஆண்டைப் போலவே கடைசி நேரம் வரை தாமதித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல், 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்து விடுமோ என்கிற ஐயம் தொழிலாளா்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அரசு தேவையற்ற தாமதம் செய்வது நியாயமல்ல.

விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் போனஸின் அளவை, தமிழக அரசு 25 சதவீதமாக உயா்த்தி, உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →