தமிழ்நாடு

சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது: விஜயகாந்த்

DIN


சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை பார்க்கும்போது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பதிவில் பதிவிட்டிருப்பதாவது: 

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, ஆளையே கடித்த கதையாக, தற்போது ஆளுநர் மாளிகையிலேயே வெடிகுண்டு வீசிய செயல், வண்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு, இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். 

அரசு கவனம் செலுத்தி, வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகாமல், கடுமையான தண்டனை வழங்கினால்தான், இது போன்ற குற்றங்கள் பரவாமல் தடுக்க முடியும். 

ஆளுநர் மாளிகையிலேயே, வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை பார்க்கும்போது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. 

எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின்  உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். 

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல்  இருக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருப்பூரில் பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன

முத்தூரில் குட்கா விற்பனை: கடைக்காரா் கைது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில்151 பள்ளிகள் 100% தோ்ச்சி

கடலூரில் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT