தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் தற்போது 5,41,422 வாக்காளர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். 

DIN


நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  கீழ்வேளூர்,  நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,65,472 ஆண் வாக்காளர்களும், 2,75,926 பெண் வாக்காளர்களும், 24, மூன்றாம் பாலினத்தவர் என 5,41,422 வாக்காளர்கள்  உள்ளனர். 

18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளராக சேர்ந்து கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்கம் தொடர்பாக நவம்பர் மாதம் 4 -ஆம் தேதி 5-ஆம் தேதி 18-19 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் அந்தந்த வாக்கு சாவடிக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயோத்தி ராமர் கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு!

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பாடு: கத்தார் பிரதமர் அறிவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியைத் தடுக்க ரகசிய கூட்டணி: மாயாவதி குற்றச்சாட்டு!

மகளிர் உலகக் கோப்பை: கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

குன்றுகளை தகர்த்து, ஆறுகளை மடைமாற்றி... உருவாக்கப்பட்ட நவி மும்பை விமான நிலையம்!

SCROLL FOR NEXT