தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்றுமுதல் (அக்.29) பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு, இன்றுமுதல் நவம்பர் 12ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
டெண்டர் முறையில் கடைகள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பட்டாசுகள் விற்பனை இன்றுமுதல் தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.