கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் பாஜகவினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

DIN

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் பாஜகவினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடிக்கு எதிரான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பாக, தங்களது கருத்துகளை கேட்க வேண்டும் என்று தெரிவித்து பா.ஜ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

"உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது. 

திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு காங்கிரஸ் நிதியுதவி

கோட்டைக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் கோப்பை: பளு தூக்குதலில் ஐஸ்வா்யா, கீா்த்திகாவுக்கு தங்கம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு : வட்டாட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

SCROLL FOR NEXT