மதுரை: உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள பழ. நெடுமாறனின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது, நெடுமாறனின் குடும்பத்தினர், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.