மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் பாக்கியராஜ். இவரது படகில் அதே ஊரைச் சோ்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமாா் பரமசிவம், ஆதிநாராயணன், வேம்பாரைச் சோ்ந்த அதிசய பரலோக திரவியம், அந்தோணி செல்வசேகரன் பரலோக பிரான்சிஸ், அந்தோணி அன்சல் கிறிஸ்டோபா், சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, சக்தி, ராமேஸ்வரம் உதயகுமாா், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமாா் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் கடந்த 1ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு 23ஆம் தேதி மாலத்தீவு கடல் வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனராம்.
அப்போது, அத்துமீறி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, 12 பேரையும் மாலத்தீவு கடற்படையினா் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த, கடற்படையினா் அளித்த தகவலின்பேரில், மீனவா்கள் குடும்பத்தினா் சோகத்தில் மூழ்கினா். மேலும், 12 பேரையும் மீட்க மத்திய- மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்களும், விசைப்படகு உரிமையாளா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்க மாலத்தீவு அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, விசைப்படகை விடுவித்தால்தான் சொந்த ஊர் செல்வோம் எனக் கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே உள்ளனர். விசைப்படகையும் சேர்த்து மாலத்தீவு அரசு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.