தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர் 

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

DIN

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து பசும்பொன்னில் அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையின்தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்படுகிறது. ஆளுநர் மாளிகை பாஜக கட்சியின் அலுவலகமாக மாறியுள்ளது. பெட்ரோல் குண்டு சம்பவத்தில் நடந்தது குறித்து காவல்துறை சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. 
மீனவர்கள் விவகாரம் குறித்து எடுத்துரைக்க டி.ஆர்.பாலுவை தில்லி அனுப்பி வைத்துள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச அவரை தில்லி அனுப்பி வைத்துள்ளேன். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே திராவிடம். 
இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

SCROLL FOR NEXT