செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 5 மணிநேரமாக இருந்த சடலம்(படம்: எக்ஸ்) 
தமிழ்நாடு

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 5 மணிநேரமாக இருந்த சடலம்: ஏன் இந்த அவலம்?

செங்கல்பட்டு ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் உயிரிழந்தவரின் சடலம், 5 மணிநேரமாக மீட்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

செங்கல்பட்டு ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் உயிரிழந்தவரின் சடலம், 5 மணிநேரமாக மீட்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையம் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதி அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறைக்கு தகவல் அளித்தும் 5 மணிநேரமாக சடலம் மீட்கப்படாமல் அந்த இடத்திலேயே இருந்துள்ளது.

ரயில்வே மற்றும் நகர காவல்துறைக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னை காரணமாக சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, முன்பதிவு மையத்தில் ஒருவர் உயிரிழந்ததை அறியாத பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT