நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ. 
தமிழ்நாடு

அவதூறு கருத்து தெரிவித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: ஈ.ஆர். ஈஸ்வரன்

திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

DIN

நாமக்கல்: திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

அண்மையில் திருச்செங்கோடு தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவையில் நான் துதிப் பாடுவதாகவும், மக்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவதில்லை என குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை பதிவேடுகளை எடுத்து பார்த்தால் நான் என்ன பேசி உள்ளேன், எதற்காக பேசி உள்ளேன் என்பது தெரியவரும். 

இது தொடர்பாக என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க அவர் தயாராக உள்ளாரா? அவ்வாறு இல்லையெனில் பொதுக்கூட்டத்தில் பேசியமைக்கு என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT