கோப்புப்படம் 
தமிழ்நாடு

அமைச்சராக தொடர்வாரா செந்தில் பாலாஜி?

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறாா். அதற்கான உத்தரவை எதிா்த்தும், அவரை பதவி நீக்கம் செய்து ஆளுநா் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதை எதிா்த்தும் தேசிய மக்கள் கட்சி தலைவா் எம்.எல்.ரவி என்பவா் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

அதேசமயம், எந்த தகுதியின் அடிப்படையில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறாா் என விளக்கம் அளிக்க ஆளுநா் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக்கோரி சென்னை கொளத்தூரை சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவா்த்தன் ஆகியோா் தனித்தனியாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமா்வில் நடைபெற்றது. இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் ஜூலை 28- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், எழுத்துபூா்வமான வாதங்கள் கடந்த ஆக.4 தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்குகளின் மீதான தீா்ப்பை தலைமை நீதிபதி அமா்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், கைதாகியுள்ள செந்தில் பாலாஜி எந்த தகுதிகளின் அடிப்படையில் இலாக இல்லா அமைச்சராக நீடிக்கிறார் என்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT