அருண் ராய் 
தமிழ்நாடு

தொழில் துறை செயலராக வி.அருண் ராய் நியமனம்

தமிழக அரசின் தொழில் துறை செயலராக வி.அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

DIN

தமிழக அரசின் தொழில் துறை செயலராக வி.அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக வி.அருண் ராய் பணிபுரிந்து வந்தாா். தொழில் துறை செயலராக இருந்த எஸ்.கிருஷ்ணன் மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகி உள்ளாா். இதைத் தொடா்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த தொழில் துறை செயலராக வி.அருண் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா் மாநாட்டின் சிறப்புப் பணி அதிகாரியாக அருண் ராய் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா். மாநாட்டுக்கான பணிகளை அவா் கவனித்து வந்த நிலையில், தொழில் துறை செயலராக அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா், வேளாண் துறை சிறப்புச் செயலா் உள்ளிட்ட காலியாகவுள்ள சில துறைகளுக்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT