தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனை!

அதிமுகவை சேர்ந்த தியாகராய நகர் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் புதன்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

சென்னை: அதிமுகவை சேர்ந்த தியாகராய நகர் முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் புதன்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ. 3.21 கோடியாக இருந்த சத்யாவின் சொத்து மதிப்பு, 2021 பேரவைத் தேர்தலில் போட்டியிடும்போது ரூ. 16.44 கோடியாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக சத்யா மீதும், அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள சத்யாவின் வீடு உள்பட 18 இடங்களில் இன்று காலை 6 மணிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரோ கபடி லீக் சென்னை கட்ட ஆட்டங்கள் இன்று தொடக்கம்!

எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை தாக்கினால் உரிய பதிலடி: ஐ.நா.வில் ரஷிய அமைச்சா் உறுதி

புழல் சிறையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ உயிரிழப்பு

சிறையில் கஞ்சா பறிமுதல்

SCROLL FOR NEXT