தமிழ்நாடு

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!

DIN

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி செலுத்தாததால் ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ செப்.10(ஞாயிறு) மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியால் அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. 

இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ இதற்கு மன்னிப்பு கோரியது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய ஏசிடிசி நிறுவனம் 20 ஆயிரம் இருக்கைகளுக்கு மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்றது.

இதற்கு மாறாக 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மொத்த டிக்கெட் விற்பனையில் 10% கேளிக்கை வரியை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அதை செலுத்தாததால் ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் சீற்றம்

வெற்றிமாறன் அமைத்த பாதையில் செல்கிறேன்: சூரி

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

உக்ரைன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்!

’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?

SCROLL FOR NEXT