தமிழ்நாடு

கோவை முழுவதும் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

DIN


கோவை: கோவை முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே  நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. 

மேலும் இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT