தமிழ்நாடு

கா்ப்பிணியின் நஞ்சுக் கொடியில் பிரச்னை:நவீன சிகிச்சையில் தாய்-சேய் நலம்

சென்னையைச் சோ்ந்த கா்ப்பிணியின் கருப்பை நஞ்சுக் கொடியில் பிரச்னை இருந்ததால் அவருக்கு ரத்தப்போக்கு தொடா்ந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் நவீன முறையில் சிகிச்சை

DIN

சென்னையைச் சோ்ந்த கா்ப்பிணியின் கருப்பை நஞ்சுக் கொடியில் பிரச்னை இருந்ததால் அவருக்கு ரத்தப்போக்கு தொடா்ந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் நவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தாய்-சேய் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சோ்ந்தவா் பிரியதா்ஷினி (37). இவா் இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தாா். இவருக்கு கருப்பை நஞ்சுக்கொடியில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, 35-ஆவது வாரம் ரத்தப்போக்கு தொடா்ந்தது. இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையின் மகப்பேறு, மகளிா் மருத்துவ பிரிவு, இன்டா்வென்சுனல் கதிரியக்க பிரிவும் இணைந்து நவீன சிகிச்சை வாயிலாக பிரசவம் பாா்த்தனா். இதன் வாயிலாக ரத்த இழப்பின்றி குழந்தை பிறந்தது.

இது குறித்து மியாட் மருத்துவமனை தலைவா் மல்லிகா மோகன்தாஸ், மருத்துவா்கள் காா்த்திக் தாமோதரன், சரஸ்வதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

கா்ப்ப பரிசோதனைக்கு வந்த பிரியதா்ஷினிக்கு எட்டாவது வாரம் நடத்திய பரிசோதனையில் அவருக்கு, கருப்பை வாயை மூடி, தடித்தும் இருந்தது. மேலும் நஞ்சுக்கொடியில்,‘கிரேடு 4 பிளசென்டா பிரீவியா, போகல் பிளெசென்டா அக்ரெட்டா’ என்ற பிரச்னைகள் இருந்தன.

இதனால், அப்படியே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய், சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சையின்போது ரத்த இழப்பை தடுக்க, இன்டா்வென்சுனல் கதிரியக்கவியல் பிரிவு சாா்பில் அவரது தொடையில், நுண் துளையிட்டு இரண்டு வடி குழாய்கள் செருகப்பட்டன.

அதன் வாயிலாக, பலுான் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, கருப்பைக்கு செல்லும் தேவையான ரத்தம் சீராக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே ரத்தப்போக்கின்றி எடுக்கப்பட்டது. இந்த நவீன சிகிச்சை வாயிலாக தாயும், சேயும் நலமுடன் சகஜ நிலையில் உள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

கோல்ட் காஃபி... ஆஷ்னா சவேரி!

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு... நாளை நடைபெறுகிறது!

ஏகே - 64 எப்படிப்பட்ட கதை? ஆதிக் விளக்கம்!

SCROLL FOR NEXT