தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: காய், கனி, மலர்களின் விலை கடும் உயர்வு!

சென்னை கோயம்பேடு உள்பட கடலூர் சந்தை, திருச்சி காந்தி சந்தை, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கன்னியாகுமரி தோவாளை ஆகிய சந்தைகளில் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளது. 

DIN

விநாயகர் சதுர்த்தியையொட்டி சந்தைகளில் காய், பழங்கள் மற்றும் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

சென்னை கோயம்பேடு உள்பட கடலூர் சந்தை, திருச்சி காந்தி சந்தை, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கன்னியாகுமரி தோவாளை ஆகிய சந்தைகளில் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளது. 

குறிப்பாக பூக்களின் விலை கடந்த வாரத்தை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வியாபார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

எனினும், பண்டிகை நாள்களையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

பன்னீர் ரோஜா கிலோ ரூ. 160, மல்லி கிலோ ரூ.800, முல்லை கிலோ ரூ.800, கனகாம்பரம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பழங்களின் விலையும் உயர்ந்து ஆப்பிள் கிலோவுக்கு ரூ.140, வாழைப்பழம் ரூ.100, மாதுளை கிலோ ரூ.160, திராட்சை ரூ.160-க்கு விற்பனையாகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT