தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. 

DIN


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, வடபழனி, அசோக்நகர், கே.கே. நகர், வளசரவாக்கம், போரூர், உளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப். 23 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிசி பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு பேரிடா் கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு பயிற்சி

வாக்காளா் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு இணையத்தில் 13 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

SCROLL FOR NEXT