சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை கிடங்கில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ, 1லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
தியாகராய நகரில் சிவஞானம் தெருவில் பிரபல ஜவுளிக்கடையின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிக்க | தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.