படம்: ட்விட்டர் 
தமிழ்நாடு

ஏசி இயங்காததால் ரயிலை நிறுத்திய பயணிகள்: திருப்பூரில் பரபரப்பு

கொச்சுவேலி விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

திருப்பூர்: கொச்சுவேலி விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் கொச்சுவேலி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நேற்றிரவு திருப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது ஏ1 பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் ஏ1 பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என்று ரயில்வே காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருப்பூரில் ஏசி கோளாறு சரிசெய்ய முடியாததால், போத்தனூர் ரயில் நிலையத்தில் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டு ஏசி கோளாறு சரிசெய்யப்பட்டது.

ரயிலில் அபாய சங்கிலி இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் திருப்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 17 கிராமங்கள் தோ்வு: திருவள்ளூா் ஆட்சியா்

SCROLL FOR NEXT