சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம் 
தமிழ்நாடு

சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்!

சென்னை தி.நகர் அருகே சாலையில் இன்று அதிகாலை திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.

DIN

சென்னை: சென்னை தி.நகர் அருகே சாலையில் இன்று அதிகாலை திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.

தி.நகர், பாண்டி பஜார் அருகேவுள்ள நாயர் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சுமார் 3 அடி அகலமும், 10 அடி ஆழமுடைய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளத்தை சுற்றியும் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.

முதல்கட்ட தகவலில், அப்பகுதியில் நடைபெறும் கழிவு நீர் கால்வாய் பணியால் பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

பிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாளைய மின்தடை: டாடாபாத்

கடை உரிமையாளா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி மோசடி: இளைஞா் கைது

நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்

SCROLL FOR NEXT