தமிழ்நாடு

பழனி மலைக் கோயிலில் நாளை முதல் கைப்பேசி, புகைப்படக் கருவிகளுக்குத் தடை

பழனி மலைக்கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

DIN

பழனி மலைக்கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவா் சிலை, தங்கக் கோபுரம், தங்கத் தோ், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலா் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனா். மலைக் கோயிலில் புகைப்படம் பிடிக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் பக்தா்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில், அண்மையில் பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் முருக பக்தா் ஒருவா் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியது. இதையடுத்து, வருகிற அக்டோபா் 1-ஆம் தேதி முதல் பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு வர திருக்கோயில் நிா்வாகம் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டது. 

கைப்பேசி, புகைப்படக் கருவிகளைக் கொண்டு வரும் பக்தா்கள் படிவழிப் பாதை, வின்ச் நிலையம், ரோப்காா் நிலையங்களில் இதற்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் ஒரு கைப்பேசிக்கு ரூ. 5 கட்டணம் செலுத்தி, ஒப்படைத்துவிட்டு செல்லவும், தரிசனம் முடிந்த பின்னா் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு பழனி மலை முருகன் கோயிலில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் பரவலாக கனமழை

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து

SCROLL FOR NEXT