இன்றுமுதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேசின் பாலம் - வியாசா்பாடி ஜீவா இடையே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முதல் புதன்கிழமை (ஜூன் 14) வரை இரவு 11.30 முதல் அதிகாலை வரை 5.40 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில், சென்ட்ரலிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமையும், அதிகாலை 4.15 மணிக்கு செல்லும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரலிலிருந்து ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்ட்ரலிலிருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு செல்லும் ரயில், கடற்கரையிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு இரவு 1.20 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமை ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராமிலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமையும், அதிகாலை 5.30 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமையும், அதிகாலை 3.20 மணிக்கு செல்லும் ரயில் புதன்கிழமையும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியிலிருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு செல்லும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும், அதிகாலை 4 மணிக்கு செல்லும் ரயில் புதன்கிழமை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருவள்ளூரிலிருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமையும் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு செல்லும் ரயில் புதன்கிழமையும், அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும் ஆவடியுடன் நிறுத்தப்படும். பட்டாபிராமிலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை ஆவடியுடனும், அரக்கோணத்திலிருந்து வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமை சென்னை கடற்கரையுடனும் நிறுத்தப்படும்.
மாற்றுப் பாதை: அரக்கோணம் மற்றும் திருத்தணியிலிருந்து இரவு 10.45 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சென்னை சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடிக்கு இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமையும், இரவு 12.15 மணிக்கு புறப்படும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.