மாலுமி உயிரிழப்பு: குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஸ்ரீநாத் ஆறுதல்
ஓமன் நாட்டில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி நிஷாந்தின் குடும்பத்தினரை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது பற்றி...
ஓமனில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தூத்துக்குடியை சேர்ந்த மாலுமி நிஷாந்த் உயிர்த்தநாதன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஸ்ரீநாத் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியை சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் (35) எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ஈரான் போர் காரணமாக எம்டி செலஸ்டியல் கப்பல் எங்கும் செல்ல முடியாமல் ஓமன் நாட்டில் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, நிஷாந்த் உயிர்த்தநாதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சை உதவி ஏதும் கிடைக்காததால், அவர் கப்பலிலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிஷாந்தின் குடும்பத்தினரை இன்று (ஜூன் 20) நேரில் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், ஆறுதல் கூறினார். மேலும், நிஷாந்தின் குடும்பத்தினருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அதுமட்டுமின்றி, நிஷாந்தின் மனைவியின் கல்வித் தகுதிக்கேற்ப உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.
Minister Srinath met and offered condolences to the family of Indian seafarer Nishanth from Thoothukudi who passed away in Oman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.