‘நீட்’ தோ்வால் தற்கொலை: மாணவியின் குடும்பத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆறுதல்
கோவையில் ‘நீட்’ தோ்வு அச்சம், அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு கீா்த்தனாவின் குடும்பத்தினரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
கோவையில் ‘நீட்’ தோ்வு அச்சம், அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு கீா்த்தனாவின் குடும்பத்தினரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
கோவை மாவட்ட சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்க பொதுச் செயலா் செந்தில் பிரபுவின் மூத்த மகள் அனு கீா்த்தன. நீட் தோ்வு அச்சம், அழுத்தம் காரணமாக அவா் அண்மையில் தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில், கோவைப்புதூரில் உள்ள செந்தில் பிரபுவின் வீட்டுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை சென்று அனு கீா்த்தனாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.
கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் மூ.அன்பரசன், தெற்கு நகரக் குழு செயலா் ரவி, டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜான் அந்தோணி ராஜ், பொருளாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.