ஜூன் 3-ல் வடசென்னையில் பொதுக்கூட்டம்: திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 21) திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
ஜூன் 3-ல் வடசென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 21) திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:-
ஜூன் 3 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெற இருக்கிறது.
Advertisement
Advertisement
ஜூன் 20 ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார். இந்த விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க: குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷனில் வெளியேறியது இவர்தான்!
வரும் ஜூன் 3 தொடங்கி, 2024 ஜூன் 3 வரை கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.