முகப்பு
கோப்புப் படம்.
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

Updated On : 1 ஏப்ரல், 2024 at 6:03 AM
கோப்புப் படம்.
பகிர்:

தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி நிகழாண்டு சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட இருந்தது.

ஆனால் இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →