தமிழ்நாடு

தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்யக்கூடும்.

DIN

தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

ஏப்ரல் 2 தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 3 தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டக்ஙள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39டிகரி - 41 செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகரி - 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34டிகிரி - 37டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT