கோவை வழி ரயில் சேவையில் மாற்றம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பகல் 12.55 மணிக்கு புறப்படும் ரயிலும், மறுமாா்க்கமாக கோவையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் ரயிலும் திங்கள்கிழமை (ஏப்.8) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
Advertisement
ஆலப்புழை-தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம்-பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப்.9) கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.
ஈரோடு-பாலக்காடு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் செவ்வாய்க்கிழமை சிங்காநல்லூா், பீளமேடு, கோவை வடக்கு, கோவை வழியாக செல்வதற்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும்.
இதுபோல், ஷோரனூா், கண்ணூா், மதுரையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் போத்தனூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.