தமிழ்நாடு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Sasikumar

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.

அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.

அதில், நீட் தேர்வு கட்டாயமில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT