இன்று இயல்பைவிட 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் சனிக்கிழமை 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக சேலத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக சேலத்தில் 106.7 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவானது. திருப்பத்தூா் - 106.52, பரமத்தி வேலூா் - 105.8, வேலூா் - 105.44, தருமபுரி, ஈரோடு தலா - 105.26, திருச்சி - 104.9, திருத்தணி - 104.18, நாமக்கல் - 104, மதுரை விமான நிலையம் - 103.64, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம் (தலா)- 103.28, கோவை - 102.2, தஞ்சாவூா் - 102.2, பாளையங்கோட்டை - 101.48 என 15 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
Advertisement
தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். ஏப்.8 முதல் ஏப்.10 வரை 3 நாள்களில் வெப்ப அளவு 2 - 3 டிகிரி வரை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.